லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் கடந்தாண்டு கமிட் ஆன திரைப்படம் தான் ஏகே 62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கடந்தாண்டு மார்ச் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் ஷூட்டிங்கை விக்னேஷ் சிவன் கடந்த ஜனவரி மாதம் தொடங்க இருந்த நேரத்தில் அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம்.
24
விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவருக்கு பதில் அடுத்த மாதமே மகிழ் திருமேனியை கமிட் செய்தனர். இதையடுத்து படத்தின் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகளையும் உடனே தொடங்கினார் மகிழ். கடந்த மே மாதம் 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று மகிழ் திருமேனி இப்படத்தில் கமிட் ஆனதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம் இப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிட்டு உள்ளதாகவும் அறிவித்தனர்.
மே மாதம் வந்த அறிவிப்புக்கு பின் விடாமுயற்சி படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. கடந்த மூன்று மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு இப்போ ஆரம்பமாகிவிடும், அப்போ ஆரம்பமாகிவிடும் என தகவல் கசிந்தாலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அஜித் ரசிகர்கள், செல்லும் இடமெல்லாம் விடாமுயற்சி அப்டேட் கேட்டு வருகின்றனர். அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 போட்டியில் கூட அஜித் ரசிகர் ஒருவர் விடாமுயற்சி அப்டேட் கேட்டது இணையத்தில் வைரலாகியது.
44
இதனிடையே ஆகஸ்ட் 15-ந் தேதிக்கு மேல் விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேலும் தாமதமாகும் என அஜித் தரப்பில் இருந்து லைகாவுக்கு ஒரு தகவல் பறந்துள்ளதாம். இதனால் கடுப்பான லைகா, விடாமுயற்சியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இப்படம் தொடங்கும் முன்பே அதன் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸிற்கு விற்கப்பட்டுவிட்டதால், தற்போது படத்தை ஆரம்பிக்கவும் முடியாம... விலகவும் முடியாம திண்டாடி வருகிறதாம் லைகா. இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.