ஜெயிலர் படம் படம் ரிலீஸாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுவிட்டார். ஆண்டு தோறும் மேற்கொள்ளும் அவரது இமயமலை பயணம் கொரோனா காரணமாக தடைபட்டிருந்து. இந்த முறை கடந்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் இமயமலைக்குச் சென்றார்.
இந்தப் பயணத்தை முடித்த ரஜினிகாந்த் திடீரென வட மாநிலத்தில் அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து வருகிறார்.
முதலில் ஜார்க்கண் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். பின், ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எம்.ஏ. அம்பா பிரசாத் ரஜினிகாந்தைத் தேடி வந்து சந்தித்தார்.
உ.பி, சென்ற ரஜினி அந்த மாநில ஆளுநர் ஆனந்தி பென்னைச் சந்தித்தார். மலர் கொத்து வழங்கி அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் ரஜினிகாந்த் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவைச் சந்திக்கச் சென்றார்.
துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவுடன் இந்தியில் வெளியான ஜெயிலர் படத்தையும் ரஜினிகாந்த பார்த்து மகிழ்ந்தார்.
அடுத்த சந்திப்பாக மாலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து மரியாதை செலுத்தினார்.
மனைவியுடன் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்குச் சென்றிருந்த ரஜினிகாந்த் அவருக்கு சிறிய விநாயகர் சிற்பத்தை பரிசாக வழங்கினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.