கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி... நெல்சன் முதல் சிவகார்த்திகேயன் வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

Published : Aug 28, 2023, 08:45 AM ISTUpdated : Aug 28, 2023, 09:29 AM IST

கவின், மோனிகா டேவிட் தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

PREV
18
கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி... நெல்சன் முதல் சிவகார்த்திகேயன் வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
kavin wedding reception

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார். டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் சினிமாவில் செம்ம பிசியாகி உள்ள கவினுக்கு கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

28
Kavin, monicka david

இந்த நிலையில், நேற்று கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியை வாழ்த்தி உள்ளனர். கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

38
nelson family and friends

இயக்குனர் நெல்சன் தன் மனைவி மோனிஷா மற்றும் நண்பர்கள் ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் சதீஷ் ஆகியோருடன் வந்து கவின் ரிசப்ஷனில் கலந்துகொண்டார். நடிகர் கவின் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... யூடியூபரை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஜனனி - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

48
qureshi and shakthi

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்களான சக்தி மற்றும் குரேஷி ஆகியோரும் கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

58
cibi chakravarthi

கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் வந்திருந்தார். இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சிபி.

68
sivakarthikeyan

நேற்று திருமண நாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன், கவினின் திருமண வரவேற்பிலும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் கவின் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

78
super singer nithyasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகி நித்யஸ்ரீ கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களுடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தார்.

88
youtuber Irfan

யூடியூபர் இர்பான் தனது அம்மாவுடன் வந்து கவின் - மோனிகா டேவிட் ஜோடியின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டபோது எடுத்த செல்பி புகைப்படம் இது.

இதையும் படியுங்கள்... அட்லீயை ட்ரோல் செய்து அள்ளு அள்ளுனு அள்ளிய அடியே திரைப்படம்... 2 நாளில் இத்தனை கோடி வசூலா?

Read more Photos on
click me!

Recommended Stories