ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீர தமிழச்சி என பெயரெடுத்தவர் ஜூலி. இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போடியாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்த ஜூலிக்கு, பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் இந்த நிகழ்ச்சி மூலம் அவர் நிறைய சர்ச்சைகளை சந்தித்து சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானார்.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் எடிட்டர் கவுதம் ராஜு காலமானார்
இந்நிலையில், ஜூலி தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் அவர் தனது முதல் வீடியோவாக தனது வீட்டை சுற்றிக்காட்டி உள்ளார். அந்த வீடியோவில் 11 ஆண்டுகளாக தான் இந்த வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறியுள்ள ஜூலி, இது தனது சோகம், சந்தோஷம் என அனைத்தையும் பார்த்து உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஒரு ஹால், சின்ன கிச்சன், இரண்டு படுக்கையறை என அளவாக இருக்கும் இந்த வீட்டில் இருந்த தனது நினைவுகளை பகிர்ந்துள்ள ஜூலி, விரைவில் சொந்த வீடு கட்ட இருப்பதாகவும் கூறி உள்ளார். கெரியரை பொருத்தவரை ஜூலி தற்போது சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இதுதவிர விதவிதமாக போட்டோஷூட் நடத்தி பட வாய்ப்புகளையும் தேடி வருகிறார்.