குட்டிக்கரணம் அடித்தும் ஒன்னும் வேலைக்கு ஆகல.! ஓவர் சீன் போட்ட ஜூலி இப்போ விஜய் டிவி சீரியலில் நடிக்கிறாரா?

First Published | Feb 16, 2023, 6:39 PM IST

பிக்பாஸ் ஜூலி, எப்படியும் வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிய நிலையில், வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு குரல் கொடுப்பதாக கூறி, ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனத்தை ஈர்த்த ஜூலி, இதையே தன்னுடைய அடையாளமாக மாற்றிக்கொண்டு 'பிக்பாஸ்' முதல் சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுக்கடுக்காக பொய் பேசி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை சம்பாதித்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெறியேறிய பின்னரும் பலரிடம் சரமாரியாக திட்டுகளை வாங்கினார்.

நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் ஜொலிக்கும் போட்டோஸ்!

Tap to resize

Julie

அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மக்களுக்காக செவிலியர் பணியை மேற்கொள்ளவே விரும்புவதாகவும், திரைப்படங்களில் நடிக்க இஷ்டம் இல்ல என கூறிய ஜூலி, அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க மட்டுமே ஆர்வம் காட்டியது அனைவரும் அறிந்ததே...

இவரை ஹீரோயினாக வைத்து சில படங்கள் எடுக்கப்பட்ட நிலையில், அந்த படங்கள் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. ஒரு சில படங்களிலில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடிக்க ஜூலிக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

காதலருடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ்... சோசியல் மீடியாவை சூடேற்றிய பிக்பாஸ் ஆயிஷா காதல் போட்டோஸ்!

இந்நிலையில், வெள்ளித்திரையில் குட்டிக்கரணம் அடித்தும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அம்மணி சீரியல் பக்கம் சாய்ந்துள்ளார். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஜூலி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில், சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளகாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'தென்றல் வந்து என்னை தொடும்'. இந்த சீரியலில் சிறையில் தண்டனை பெற்ற ஹீரோ... தற்போது ரிலீஸ் ஆகி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை சந்திக்க தயாராகியுள்ளார். இவருக்கு உதவி செய்யும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் தன ஜூலி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவி 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்..!

Latest Videos

click me!