இப்பவும் வாடகை வீட்ல தான் இருக்கேன்... ஹீரோ ஆன பின்னும் மிடில் கிளாஸ் லைஃப் வாழும் கவின்

Published : Feb 16, 2023, 04:32 PM IST

சினிமாவில் ஹீரோ ஆன பின்பும் மிடில் கிளாஸ் வாழ்க்கையே வாழ்ந்து வருவதாக கவின் கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

PREV
14
இப்பவும் வாடகை வீட்ல தான் இருக்கேன்... ஹீரோ ஆன பின்னும் மிடில் கிளாஸ் லைஃப் வாழும் கவின்

தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியலில் கவின் நடித்த வேட்டையன் கதாபாத்திரம் மிகவும் பேமஸ் ஆனது. இதையடுத்து தொகுப்பாளராக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ள கவின், பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் கவின் முதன்முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் நட்புன்னா என்னனு தெரியுமா. இப்படம் பெரியளவில் வெற்றியடையவில்லை.

24

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய கவின். அதன்மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்நிகழ்ச்சியின் போது லாஸ்லியா மீது காதல் வயப்பட்ட கவின், அவரை காதலித்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த வேகத்தில் கவின் - லாஸ்லியாவின் காதல் முடிவுக்கு வந்தது. பின்னர் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர்.

34

அந்த வகையில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹீரோவாக நடித்த லிப்ட் திரைப்படம் நேரடியாக வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த டாடா திரைப்படம் அண்மனையில் திரையரங்குகளில் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்று வருவதோடு வசூலையும் வாரிக் குவித்துள்ளது. டாடா படத்தின் வெற்றிக்கு பின் கவின் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் ஜொலிக்கும் போட்டோஸ்!

44

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஹீரோ ஆன பின்பும் மிடில் கிளாஸ் வாழ்க்கையே வாழ்ந்து வருவதாக கவின் கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதேபோல் இன்று வரை தான் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாகவும் கவின் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். லயோலா காலேஜில் படித்தாலும் அரியர் கிளியர் செய்ய முடியாததால் இன்றளவும் டிகிரி வாங்கவில்லை என்கிற தகவலையும் அந்த பேட்டியில் கவின் பகிர்ந்துகொண்டார்.

அதேபோல் கோடிகளை குறிவைக்கும் கவின் என செய்திகள் உலா வந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு “நானும் அந்த செய்தியை படித்தேன். நல்லா இருந்துச்சு, அது நடந்தா இன்னும் நல்லா இருக்கும்” என கூலாக பதிலளித்தார் கவின். அவரின் இந்த பேட்டி தற்போது யூடியூப்பில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... TTF-க்கே போட்டியா..? ஹாயாக கைவிட்டு பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் ரச்சிதா - வைரலாகும் வீடியோ

click me!

Recommended Stories