தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஷோ முடிவுக்கு வர உள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பாவனி, அமீர், ராஜு, பிரியங்கா, நிரூப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.