ரஜினியிடம் நூல் விட்ட கீர்த்தி சுரேஷ் மம்மி! ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன சூப்பர் ஸ்டார்: ஏன்? என்னாச்சு?

Ganesh A   | Asianet News
Published : Jan 13, 2022, 07:35 AM ISTUpdated : Jan 13, 2022, 07:39 AM IST

ஆக்சுவலா ரஜினிக்கு கீர்த்தியை தனக்கு ஜோடியாக்கும் எண்ணமெல்லாம் துளியுமில்லையாம். அது ரொம்ப ஓவர்! என்று அவரே நினைக்கிறாராம்.

PREV
14
ரஜினியிடம் நூல் விட்ட கீர்த்தி சுரேஷ் மம்மி! ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன சூப்பர் ஸ்டார்: ஏன்? என்னாச்சு?

அண்ணாத்த படம் ரிலீஸாகி, நெகடீவ் விமர்சனங்களைப் பெற்றது. அதிலும் ரஜினியின் ஜோடி நயன்தாரா, ரஜினியின் தங்கை கீர்த்தி சுரேஷ்! என்பதை அநியாயத்துக்கு கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். இதை வேறு யாருமே கண்டுக்கவில்லை. ஆனால் கீர்த்தி சுரேஷின் அம்மாவும், ரஜினியின் பழைய நெற்றிக்கண் நாயகியுமான மேனகா ஓவராய் கொந்தளித்தார்.

24

‘சினிமாவை சினிமாவா பாருங்க. இதுல ஏன் லாஜிக் எதிர்பார்க்கிறீங்க. என் பொண்ணு ரஜினி சாருக்கு தங்கச்சியா என்ன, ஜோடியாவே நடிப்பா. வாய்ப்பு வந்தால் அது அவளுக்கு அதிர்ஷ்டம்.’ என்று தாம்தூம் பதிலடி தந்தார். சொன்னது மட்டுமில்லாமல், ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தியை ஜோடியாக்க முயற்சி பண்ணியவர், ரஜினியிடமே இதை ஓப்பனாக கேட்டுவிட்டாராம். 

34

அதற்கு ரஜினி ‘உனக்கே தெரியாதா? நான் ஹீரோயின் ஃபிக்ஸ் பண்றதுல தலையிட மாட்டேன். அதெல்லாம் தயாரிப்பாளர், இயக்குநர் வேலை.’ என்று சைஸாக நழுவிவிட்டாராம். அவரது அடுத்த படம் யார் தயாரிப்பு, யார் இயக்குநர்? என்று வெளியே இன்னும் தெரியாத நிலையில் மேனகாவால் அதற்கு மேல் மூவ் பண்ண முடியவில்லை. 

44

ஆக்சுவலாக ரஜினிக்கு கீர்த்தியை தனக்கு ஜோடியாக்கும் எண்ணமெல்லாம் துளியுமில்லையாம். அது ரொம்ப ஓவர்! என்று அவரே நினைக்கிறாராம். ( இது போக, கீர்த்தியின் மார்க்கெட் சரிந்துவிட்டது! அப்படின்னும் ஒரு பேச்சு இருக்குதுங்கோ).

Read more Photos on
click me!

Recommended Stories