இந்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை, அந்தந்த திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், பிரபலங்களும் இதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.