Published : Aug 26, 2022, 02:38 PM ISTUpdated : Aug 26, 2022, 03:14 PM IST
மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்ட பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகத்தின், பிரேத பரிசோதனை தகவலில் வெளியான பகீர் தகவலை தொடர்ந்து, இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவிற்கு சுற்றுலா சென்ற போது, திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக கூறப்பட்ட பிக் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சோனாலி போகத், கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25
பிக்பாஸ் 14 வது சீசனில் வயல் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான சோனாலி போகத். இவரது மரணம் குறித்த முதல் கட்ட விசாரணையின் போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதை அடுத்து சோனாலி போகத்தின் தாயார், அவர் உணவு சாப்பிட்டபின் அசௌகரியமாக இருப்பதாக தன்னிடம் போனில் கூறியதாக சொன்ன தகவல், பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்தது.
இதைத்தொடர்ந்து அவரது சகோதரர் ரிங்கு தத்தா தன்னுடைய சகோதரி மரணத்தின் மீது சந்தேகம் உள்ளதாகவும், அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் தான் தன்னுடைய சகோதரியை கொலை செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த தகவல் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
45
இந்நிலையில் கோவா மருத்துவ கல்லூரியில் நடந்து முடிந்த சோனாலி போகத்தின் பிரேத பரிசோதனை முடிவில், சோனாலி மாரடைப்பு காரணமாக இறக்கவில்லை என்பது வெட்டா வெளிச்சம் ஆகியுள்ளது. மேலும் அவரது உடலில் பல காயங்கள் இருப்பதாகவும் எனவே சோனாலி போகத்தை பலவந்தப்படுத்தி இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியானது. எனவே இது நிச்சயம் ஒரு படுகொலையாக தான் இருக்கும் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே சோனாளியின் கணவர் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில், தற்போது சோனாலியின் மர்ம மரணமும் பரபரப்பு ஏற்படுத்தியது.
சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு தத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் சோனாலியின் உதவியாளர்களான சுதீர் சக்வான் மற்றும் சுக்விந்தர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், எனவே இந்த கொலைக்கு பின்னணி என்ன என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. மேலும் நடிகையும் பாஜக பிரபுகரமான சோனாலி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் தங்களது விசாரணையை நடத்தி வருகின்றனர் என்பது குறிபிடித்தக்கது.