குட்டை டவுசர்...கழட்டி விட்ட கோட்.. பக்கா கிளாமர் போஸ் கொடுத்த த்ரிஷா

First Published | Aug 26, 2022, 2:29 PM IST

திரிஷாவின் முந்தைய கவர்ச்சிகரமான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கிடையே இவர் அரசியலுக்கு வர உள்ளார் என்கிற பேச்சும் அடிபட்டது அதனை முற்றுலும் மருத்துள்ளார் திரிஷா.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நாயகியாக இருப்பவர் த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் திரையுலத்திற்கு அறிமுகமானார். ஆனாலும் இவர் இசை வீடியோ மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் லேசா லேசா படத்தில் பிரியதர்ஷினியாக நடித்திருந்தார். இந்த பட வெளியீட்டிற்கு தாமதமானதால்  மௌனம் பேசியதே இவரின் முதல் நாயகிக்கான அறிமுகப்படமாக சொல்லப்படுகிறது. பின்னர் மனசெல்லாம் என்னும் படத்தில் நோய்வாய்ப்பட்ட நாயகியாக தோன்றினார் திரிஷா. ஆனால் இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு...Selvaraghavan's Bakasuran First Look : பகாசூரனாக செல்வராகவன்... வெளியானது முதல் பார்வை ...

Tap to resize

Trisha

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படம் நல்ல வெற்றிகளை பெற்றது. பிராமண பெண்ணாக விக்ரமுக்கு ஜோடியாக நடித்த இவர் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் பலவற்றையும் பெற்றுக் கொடுத்தது.

கில்லியில் விஜயுடனும், உனக்கும் எனக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், கிரீடம் படத்தில் நான் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்து முன்னணி நாயகர்களின் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா. பின்னர் அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் பிலிம்பேர் விருதுகளை பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு...அசர வைக்கும் 'பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யா ராய்யின்... நந்தினி தோற்றம்! வைரலாகும் BTS போட்டோஸ்!

சிம்புக்கு ஜோடியாக இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா இன்றளவும் புகழ்பெற்ற படமாகவே இருக்கிறது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் திரிஷா. தொடர்ந்து பல தெலுங்கு, கன்னடத்திலும் நடித்து வந்த இவர்  2018 ஆம் ஆண்டு வெளியான 96 படத்தில் ஜானுவாகத் தோன்றி 90ஸ் கிட்டுகளின் மலரும் நினைவுகளை தூண்டி இருந்தார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா? விஜய் டிவி வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!

அதன் பின்னர் இவர் ரஜினியுடன் பேட்ட பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக பரமபத விளையாட்டு உள்ளிட்ட  படங்களில் தோன்றியிருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து வருகிறார் திரிஷா.

சோழ இளவரசியான இவர் ராஜராஜ சோழனின் சகோதரியாக வரும் காட்சிகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை 2 , ராம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், சாலை உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

Trisha

இந்நிலையில் திரிஷாவின் முந்தைய கவர்ச்சிகரமான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கிடையே இவர் அரசியலுக்கு வர உள்ளார் என்கிற பேச்சும் அடிபட்டது அதனை முற்றுலும் மருத்துள்ளார் திரிஷா.

Latest Videos

click me!