பிக்பாஸ் டைட்டில் வின்னர்
தொலைக்காட்சிகளில் மிகவும் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி முதல் சீசனிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டது. இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி பிக்பாஸ் டைட்டிலையும் தட்டிச் சென்றார் ஆரவ்.
குவிந்த பட வாய்ப்பு
பிக்பாஸ் மூலம் பிரபலங்களுக்கு அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் அதிக மவுசு உண்டு. அந்தவகையில் நடிகர் ஆரவ்வும், பிக்பாஸுக்கு பின் ஏராளமான படங்களில் நடிக்க கமிட் ஆனார். முதலாவதாக இவர் நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்கிற திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. இதையடுத்து இவர் நடித்த ராஜ பீமா திரைப்படம், ரிலீசாகாமல் முடங்கிப் போய் உள்ளது.
உதயநிதிக்கு வில்லன்
ஆரம்பத்தில் வெளியானபடங்கள் சரிவர அமையாததால், தற்போது ஹீரோவாக நடிப்பதை ஓரங்கட்டி வைத்துவிட்டு, வில்லன் வேடங்களில் நடிக்கத்தொடங்கி உள்ளார் ஆரவ். அதன்படி இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மிஸ் ஆன சான்ஸ்
இந்நிலையில், நடிகர் ஆரவ், சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது ஆரவ் தானாம். உதயநிதி படத்திற்காக அவர் உடல் எடை அதிகரித்து இருந்ததால், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு அந்த தோற்றம் செட் ஆகாது எனக் கூறிவிட்டார்களாம். இதனால் அவருக்கு பதில் வினய்யை வில்லனாக நடிக்க வைத்துள்ளனர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... Samantha New Business : சைலண்டாக புது பிசினஸ் தொடங்கிய சமந்தா.... அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?