நடிகைகளின் பிசினஸ்
சினிமா நடிகைகள் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணங்களை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி நடிகை அனுஷ்கா, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார். அதேபோல் நடிகை நயன்தாராவும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். முதலில் ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனத்தை ஆரம்பித்த நயன்தாரா, அதனை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார்.
எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு
பின்னர் டீ நிறுவனம் ஒன்றில் பார்ட்னராக இணைந்தார். அண்மையில் லிப் பாம் என்கிற அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் பல கோடி ரூபாய்யை முதலீடு செய்துள்ளாராம் நயன்தாரா. விரைவில் துபாயில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் அவர் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கூல் நடத்தும் சமந்தா
இவரைப்போல் நடிகை சமந்தாவும் நடிப்பைத் தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இவர் ஒரு மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதுதவிர சாகி என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகராமாக நடத்தி வருகிறார்.
புது பிசினஸ்
இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது மேலும் ஒரு தொழிலில் முதலீடு செய்துள்ளார். அதன்படி சஸ்டெயின் கார்ட் என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தனது தோழி ஷில்பா ரெட்டி உடன் இணைந்து தொடங்கி உள்ளார் சமந்தா. இதில் கோடிக்கணக்கான ரூபாயை அவர் முதலீடு செய்துள்ளாராம்.