பிக்பாஸ் அமீர் இப்போ இதுலயும் இறங்கிட்டாரா..! எல்லாத்துக்கும் காரணம் பாவனி தானோ.. எதிர்பாராத அறிவிப்பு!

Published : Apr 10, 2023, 10:00 PM IST

துணிவு படத்தில், அமீர் - பாவனி ஆகியோர் காதலர்களாக நடித்திருந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து இருவரும் ஜோடியாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் மற்றொரு அவதாரமும் எடுத்துள்ளார் பிக்பாஸ் அமீர்.  

PREV
15
பிக்பாஸ் அமீர் இப்போ இதுலயும் இறங்கிட்டாரா..! எல்லாத்துக்கும் காரணம் பாவனி தானோ.. எதிர்பாராத அறிவிப்பு!

Sri Nalla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் அமீர், பாவனி ஜோடி, நாயகன் நாயகியாக நடிக்கும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம், திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை பிக்பாஸ் புகழ் அமீர் தானே எழுதி இயக்குகிறார். 

25

இன்று நடந்த இப்படத்தின் பூஜையில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் G.தனஞ்செயன், திண்டுக்கல் லியோனி, விஜய் ஆதிராஜ், நிரூப், பிரியங்கா, ஷாரிக், ரச்சிதா, கிஷோர்,சத்யா, ரியோ முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். 

ஆரம்பமே... சும்மா அதிருத்துல்லா...! ஹரிஷ் கல்யாணின் 'LGM' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தல தோனி..!

35

பிக்பாஸ் மூலம் தமிழ்க மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமீர், பாவனி ஜோடி இப்போது வெள்ளித்திரையில் ஒன்றாக இணையவுள்ளார்கள். பிக்பாஸில் இருவரது ஜோடிப்பொருத்தமும் எல்லோராலும் பாரட்டப்பட நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். நடன இயக்குநர் அமீரும், நடிகை பாவனியும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக வலம் வந்த நிலையில், தற்போது நாயகன் நாயகியாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்கள். 

45

முழுக்க முழுக்க ரொமான்ஸ் காமெடியாக உருவாகும் இப்படத்தினை நடன இயக்குநர் அமீர் தானே எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் தற்கால இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில்  ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவுள்ளது.  

போதை தலைக்கேறி... வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்! கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஓவர் அலப்பறை!

55

அமீர், பாவனி நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மன்சூர் அலிகான், காயத்திரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, VTV கணேஷ், அலீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு அழகான புரமோ வீடியோவுடன் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை நடன இயக்குனர், நடிகர் என மட்டுமே இருந்த அமீரின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் பாவனி தானோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories