பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன விக்ரமன், அடுக்குமாடி குடியிருப்பில் பெண் வேடமிட்டபடி வந்து இரவில் அடாவடி செய்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதுபற்றி அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
Bigg Boss Vikraman Controversial Video Issue : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் விக்ரமன். அந்நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறிய விக்ரமன், நூலிழையில் அசீமிடம் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரிடம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அது உண்மையில்லை என்றும் அதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறி இருந்தார் விக்ரமன்.
24
Vikraman Wife
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரைப்பற்றிய ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் பெண் வேடத்தில் இருக்கும் விக்ரமன், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டு அதை செய்தியாகவும் வெளியிட்டனர். அந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து, விக்ரமனை சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில், விக்ரமனின் மனைவி இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்த கையோடு, பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது : “நாங்கள் இதற்கு முன்னர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஷூட் சம்பந்தமா எடுத்த வீடியோ தான் அது. அதை தான் தற்போது அவதூறு பரப்பும் விதமாக பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நான் அந்த சமயத்தில் வெளியூரில் இருந்தேன். என்னுடைய படத்துக்காக நான் அவரிடம் இந்த வீடியோவை எடுத்துத் தர சொன்னேன்.
44
Vikraman
ஆனால் அவர் வீடியோ எடுக்க வந்தபோது அவரை பார்த்தவர்கள் அவரை திருநங்கை என நினைத்து தாக்கி இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் செய்தது தான் குற்றம். இந்த சம்பவம் நடந்து ஆறு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. ஆனால் தற்போது சம்பந்தமே இல்லாமல் அதை பரப்பி பிரச்சனை ஆக்கி இருக்கிறார்கள். அது தொடர்பாக புகார் அளிக்க தான் காவல்நிலையம் வந்திருந்தோம். எங்கள் புகாரை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறி இருக்கிறார்கள்” என விக்ரமன் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.