விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கேன்சர் - வீடியோ வெளியிட்டு உருகிய பிக்பாஸ் தாமரை!

Published : Nov 10, 2025, 04:31 PM IST

Thamarai Shares Vijay TV chinna marumagal Actress Fights Cancer: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியலில் நடித்து வரும் நடிகைக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் சிகிச்சைக்கு உதவுமாறு தாமரை கோரிக்கை வைத்துள்ளார்.

PREV
14
சின்னமருமகள் சீரியல்:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வங்கியில், கூட்டு குடும்பங்களின் சிறப்புகளை விளக்கும் விதமாகவும், தன்னுடைய டாக்டர் கனவை அடைய துடிக்கும் ஒரு சாதாரண பெண்ணின் விடாமுயற்சியை பறைசாற்றும் விதமாகவும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் 'சின்ன மருமகள்'.

24
ஹீரோ - ஹீரோயின்:

இந்த சீரியலில், கண்ட நாள் முதல், இதயத்தை திருடாதே போன்ற சீரியல்களில் நடித்த நவீன் ஹீரோவாக நடிக்க, ஸ்வேதா ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், OAK சுந்தர், அருண் ராஜன், தாமரை செல்வி, கௌரி ஜானு, சிவ கவிதா, பானுமதி, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இந்த செறியால் தற்போது வரை பல்வேறு திருப்பு முனைகளோடு ஒளிபரப்பாகி வருகிறது.

34
தாமரை செல்வி வெளியிட்ட பதிவு:

இந்த நிலையில், 'சின்ன மருமகள்' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகைக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அவரின் சிகிச்சைக்கு ரூ.17 லட்சம் தேவைப்படுவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் தாமரை. அதாவது இந்த சீரியலில் தாமரைக்கு மாமியார் வேடத்தில் நடித்து வருபவர் தான் சலீமா. இவர் 70வது மற்றும் 80 காகாலகட்டங்களில் வெளியான பல படங்களில் டான்சராகவும், ஹீரோவுக்கு அக்கா தங்கை போன்ற வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் ஹீரோயினாக ஜாலி முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் இவர், தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் நடித்து வருகிறார்.

44
சலீமாவுக்கு புற்றுநோய்:

இவருக்கு அண்மையில் தான் Carcinoma என்கிற புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. வாய், மூக்கு, மற்றும் தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்த கூடியது இந்த வகை கேன்சர். இதற்காக தற்போது அப்பலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும், இவரின் சிகிச்சைக்கு ரூ.17 முதல் ரூ.20 லட்சம் வரை செலவு ஆகும் என மருத்துவர்கள் கூறி உள்ளார்களாம். அவ்வளவு பெரிய தொகையை இவரால் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாது என்பதால், அவருக்கு ரசிகர்கள் உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories