பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சண்டைகளுக்கு நடுவே சீறும் சிறப்புமாக நிகழ்ச்சி முடிந்தது. வின்னராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் வெற்றி பெற்றனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. சுரேஷ் தாத்தா என ரசிகர்கள் உரிமையோடு அழைக்கும் அளவிற்கு மனதில் பதித்துவிட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே, பல பிரச்சனைகளை கொளுத்தி போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக மாற்றி வந்த சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் சற்றே அமைதியானார். அதனால் அவருக்கு வாக்குகள் குறைந்து வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இருப்பினும் இன்று வரை சுரேஷ் சக்கரவர்த்தி ரசிகர்களுடன் சோசியல் மீடியா மூலமாக நெருக்கமாக இருக்கிறார். குக்கிங் யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய திருமண நாள் குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
தனக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை மகிழ்வுடன் தெரிவித்துள்ள சுரேஷ் சக்கரவர்த்தி, திருமணத்தன்று எடுத்த புகைப்படத்தையும், தற்போதை புகைப்படத்தையும் ஒன்றாக பதிவிட்டுள்ளார்.
அத்துடன்,‘30 வருடங்கள் என்னுடன் வாழ்வது என்பது எளிதான ஒன்றல்ல, ஆனால் நீங்கள் அதை செய்து முடித்துள்ளீர்கள். நன்றி. 30ஆம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள். உங்களை இப்போதும் நான் காதலிக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.