தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் ரியாஸ் கான். வின்னர் படத்தில் கட்டதுரை கதாபாத்திரம் தொடங்கி பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர், நடிகை உமா ரியாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஷாரிக் ஹாசன் என்கிற மகனும் இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவிலும் நடித்து வருகிறார் ஷாரிக் ஹாசன்.
24
Bigg Boss Shariq Haasan Wife Mariya
இந்த நிலையில், நடிகர் ஷாரிக் ஹாசன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய காதலியான மரியாவை திருமணம் செய்துகொண்டார். மரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. முதல் கணவரை விவாகரத்து செய்த பின்னர் ஷாரிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மரியா. இந்த ஜோடியின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. நடிகர் ஷாரிக் ஹாசனை விட அவரது மனைவி ரியா, 3 வயது மூத்தவர்.
வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி தற்போது குட் நியூஸ் சொல்லி உள்ளது. அதன்படி தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை ஷாரிக் ஹாசனின் மனைவி ரியா அறிவித்துள்ளார். இதற்காக பிரத்யேகமாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், கையில் பிரெக்னன்சி கிட் மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட் ஆகியவற்றை வைத்துக் கொண்டு அந்த போட்டோஷுட்டில் போஸ் கொடுத்துள்ளார். அதேபோல் கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு முத்தம் கொடுத்து ஷாரிக் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
44
Bigg Boss Shariq Haasan Wife Mariya
ஷாரிக்கின் மனைவி மரியா கர்ப்பமாகி ஐந்து மாதங்கள் ஆகிறதாம். இத்தனை நாள் சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த தகவலை ஒரு வழியாக வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி என மரியா தெரிவித்துள்ளார். பேபி பம்ப் தெரிய ஷாரிக் ஹாசனின் மனைவி மரியா நடத்தி உள்ள போட்டோஷூட் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. விரைவில் அப்பா ஆகப்போகும் ஷாரிக் ஹாசனுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ரியாஸ் கான் - உமா ரியாஸ் ஜோடியும் தாங்கள் தாத்தா - பாட்டி ஆகப்போகும் தகவல் அறிந்து உற்சாகத்தில் திளைத்துப் போய் உள்ளனர்.