இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!

Published : Feb 22, 2025, 08:50 AM IST

Keerthy Suresh praises Dhanush for NEEK Movie : இப்படியொரு அழகான காதல் காட்சி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று தனுஷின் NEEK நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

PREV
15
இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!
இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!

Keerthy Suresh praises Dhanush for NEEK Movie : எத்தனையோ படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் நடிகர் தனுஷ். வருடத்திற்கு ஏராளமான படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். ஒரு நடிகரையும் தாண்டி, இயக்குநர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். நடிகர், பாடலாசியர், பின்னணி பாடகராக பல சாதனைகளை படைத்த தனுஷ் ஒரு இயக்குநராக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறா. பா பாண்டி படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

25
இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!

இந்தப் படம் ஆவரேஜ் படமாக அமைந்தது. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ராயன் படத்தை இயக்கி நடித்தார். அண்ணன், தம்பி மற்றும் தங்கை என்று குடும்பத்தோடு நடித்த தனுஷிற்கு இந்தப் படம் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக இருந்தது. ஆனால், இப்போது அவருடைய இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற 3ஆவது படம் நேற்று வெளியாகி இருக்கிறது. இதில், பவிஷ், அனிகா சுரேந்திரன், சரத்குமார், பிரியா வாரியர், சரண்யா பொன்வண்ணன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

35
இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!

ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். தனுஷ் படம் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. வெளியானது முதல் நல்ல விமர்சனமும் கிடைத்தது. பிரபலங்கள் பலரும் படம் பார்த்து பாசிட்டிவி விமர்சனங்களை முன் வைத்தனர். இவ்வளவு ஏன் சினிமா விமர்சகரான ரமேஷ் பாலா கூட தனது எக்ஸ் பக்கத்தில் படத்திற்கு பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்திருந்தார். அதில், சுவாரஸ்யம் மற்றும் பொழுதுபோக்கு திரைக்கதையுடன் கூடிய வழக்கமான கதை.

45
இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!

கிளைமேக்ஸ் ரொம்பவே வேடிக்கையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் படத்திற்கு பாராட்டு தெரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: படம் ரொம்பவே கியூட்டாக இருந்தது. இப்படியொரு ரொம்பவே அழகான லவ் ஸ்டோரி படத்தை நான் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்தப் படத்தை தனுஷ் இயக்கியிருப்பது ரொம்பவே மகிழ்ச்சி. படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

55
இப்படியொரு அழகான காதல் கதையை பார்த்து ரொம்ப நாள் ஆனது – NEEK படத்திற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு!

ஆனால், வசூலில் இந்தப் படம் சொதப்பி வருகிறது. முதல் நாளில் ரூ.2 கோடி வசூல் குவித்திருக்கிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக வந்த பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் ரூ.7.5 கோடி வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பிரதீப்புக்கு ரூ.12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories