ஷாரிக் ஹாசனுக்கு டும் டும் டும்.. துள்ளிகுதிக்கும் உமா ரியாஸ் ஜோடி - மருமகள் சும்மா தேவதை மாதிரி இருகாங்க!
Uma Riyaz : பிரபல திரைநட்சத்திரங்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கானின் மூத்த மகன், ஷாரிக் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
uma riyaz
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "அன்புள்ள ரஜினிகாந்த்" திரைப்படம் மூலம் புகழ்பெற்றது மீனா மட்டுமல்ல, அப்போது 9 வயது நிரம்பிய மற்றொரு சிறுமியும் தான். அவர் தான் இன்று கலைத்துறையில் மிகச் சிறந்த நடிகையாக பயணித்து வரும் உமா ரியாஸ், பிரபல நடிகை கமலா காமேஷின் மகள் தான் இவர். நடிகையாக மட்டுமல்லாமல் சிறுவயது முதலே சிறந்த டான்சராகவும், ஈட்டி எறிதல் வீராங்கனையாகவும் அவர் திகழ்ந்து வருகின்றார்.
riyaz khan
உமாவை போலவே அவரது கணவர் ரியாஸ் கானுக்கும் பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. கேரளாவில் பிறந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக அவர் இந்திய திரையுலகில் பயணித்து வருகின்றார். 52 வயது நிரம்பிவிட்டது என்றாலும் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வருகின்றார் ரியாஸ் கான்.
Shariq Haasan
உமா மற்றும் ரியாஸ் தம்பதிக்கு இரு மகன்கள் உண்டு, அதில் மூத்தவர் தான் ஷாரிக். இவரும் தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பயணித்து வருகின்றார். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்று 49வது நாளில் வெளியேறினார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் ஷாரிக், கடந்த சில வருடங்களாகவே காதல்வயப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
Maria
இப்பொது அந்த காதல் கல்யாணத்தில் வந்து முடிந்துள்ளது, முதலில் இது வெறும் வதந்தி என்று நம்பப்பட்ட நிலையில், ஷாரிகின் அம்மா உமா ரியாஸ் அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நெருங்கிய சொந்தங்களோடு ஆகஸ்ட் 8ம் தேதி தனது மகன், தன்னுடைய தேவதையை கரம்பிடிக்கவுள்ளதாக கூறியுள்ளார் உமா ரியாஸ்.
அவர் வெளியிட்ட பதிவில் தனது மகனை டேக் செய்ததோடு, மரியா ஜெனிபர் என்பவரையும் டேக் செய்து தனது அன்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், அந்த மரியா தான் ரியாஸ் மற்றும் உமாவின் மருமகள் என்று உறுதியாகியுள்ளது.