பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், பல பிரபலங்கள் காமெடி நடிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள் என பலர் போட்டி போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலேயே அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் விளங்குகிறது. பிக்பாஸ் 1,2,3,4 என அடுத்தடுத்து சீசன்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட்டி, தொட்டி வரை பிரபலம் மட்டுமல்லாது பட வாய்ப்புகளும் குவியும் என்பதால் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம்.
சமையல் கலைஞராக இருந்த பிக்பாஸ் பாலாஜியின் அப்பா கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அதே பிரச்சனையால் அவர் மரணமடைந்தது உறுதியானது. இதையடுத்து தந்தையின் இறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத பாலாஜியின் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்தது.
கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதாகவே தொடங்கியது. அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் 14 நாட்கள் பிரபல ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் எப்போதுமே ரகசியமாக வைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் வேகமாக கசிய ஆரம்பித்து.
bb tamil
தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
shakila
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி 2 பிரபலமும், நடிகையுமான ஷகீலாவின் மகள் மிலா கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.