பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அப்படி தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக டைட்டில் வென்ற பெண் போட்டியாளர் என்கிற சாதனையை படைத்தவர் ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அந்நிகழ்ச்சிக்கு முன்னரே சினிமாவில் நடித்து வந்தார் ரித்விகா. குறிப்பாக இவருக்கு அடையாளத்தை பெற்றுத்தந்த படம் என்றால் அது பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் தான். அப்படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரித்விகா. இதையடுத்து ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார்.
25
ரித்விகா திருமணம் தள்ளி வைப்பு
ரித்விகா முதன்முதலில் அறிமுகமானது பாலாவின் பரதேசி படத்தின் மூலம் தான். இதையடுத்து விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்த ரித்விகாவுக்கு மெட்ராஸ் படம் தான் திருப்புமுனை தந்தது. பின்னர் இருமுகன், ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற படங்களில் நடித்த ரித்விகாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீசனில் சிறப்பாக விளையாடி டைட்டிலை ஜெயித்ததோடு, மக்கள் மனதையும் வென்றிருந்தார் ரித்விகா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரித்விகாவுக்கு படவாய்ப்புகளும் குவிந்தன.
35
ரித்விகா திருமணம் ஒத்தி வைப்பு
அந்த வகையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, வால்டர், சில நேரங்களில் சில மனிதர்கள், கடாவர், ஆதார் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக ரித்விகா தேர்வு செய்து நடித்தாலும் அவருக்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை. இதனால் சினிமாவில் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டால் நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடுவார்கள். ரித்விகாவும் அதே முடிவை தான் எடுத்திருக்கிறார். அவர் தற்போது திருமணத்துக்கு தயாராகி இருக்கிறார். அவரின் நிச்சயதார்த்தமும் கடந்த மாதம் நடந்து முடிந்துள்ளது.
45
பிக் பாஸ் ரித்விகா
தனது நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரித்விகா. அதன்படி அவர் தன்னுடைய நீண்ட கால நண்பரான வினோத் லட்சுமணன் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். திருமணத்தின் போது இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தான் வரும் 27ஆம் தேதி ரித்விகாவிற்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதனை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
55
ரித்விகா திருமணம் ஒத்தி வைப்பு
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: குடும்ப சூழல் காரணமாக வரும் 27ஆம் தேதி நடைபெற இருந்த என்னுடைய திருமணம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.