பச்சை நிறமே பச்சை நிறமே... பிக்பாஸ் ஜூலியின் ‘ஆடி மாச’ ஸ்பெஷல் போட்டோ ஷூட்டை பார்த்தீங்களா?

First Published | Jul 17, 2021, 3:32 PM IST

பச்சை நிற பட்டுப்புடவை, பேக்ரவுண்டில் மயில் தொகை, பச்சை வண்ணத்தில் நகைகள் என மணப்பெண் கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 

Bigg boss Julie  Latest Photo shoot going viral
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. வீரத்தமிழச்சி என்ற பட்டப்பெயரையும் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
Bigg boss Julie  Latest Photo shoot going viral
அப்படிப்பட்ட ஜூலி விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முதலில் மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் செய்த வேலைகளால் ரசிகர்கள் நாறு நாறாக கிழிக்க ஆரம்பித்தனர். ஆதரவாளர்கள் குறைந்து ஹேட்டர்ஸ்களை அதிகப்படுத்திக் கொண்டார் ஜூலி. இன்று வரை சோசியல் மீடியாவில் ஹேட்டர்ஸ்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.
பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்ட ஜூலி தற்போது முன்னணி நடிகைகளே மிரளும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு வலை விரித்து வருகிறார்.சில படங்களில் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி, அங்கு விதவிதமான கெட்டப்புகளில் எடுக்கப்படும் போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு சூப்பர் மாடல் ரேஞ்சுக்கு மாறிவிட்டார். அல்ட்ரா மார்டன் உடையில் விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்.
என்ன தான் நெகட்டிவ் கமெண்ட் போட்டு கலாய்க்கு ஹேட்டர்ஸ் அதிகமாக இருந்தாலும், தன்னைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்களுக்காக ரக ரகமாய் போட்டோ ஷூட் எடுத்து தள்ளுகிறார்.
தற்போது பச்சை நிற பட்டுப்புடவை, பேக்ரவுண்டில் மயில் தொகை, பச்சை வண்ணத்தில் நகைகள் என மணப்பெண் கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இதை பார்க்கும் சிலரோ என்ன ஜூலி ஆடி மாச ஸ்பெஷல் போட்டோ ஷூட்டா என கலாய்த்தாலும், ஆசை ஆசையாய் கமெண்ட் அழகை வர்ணித்து கமெண்ட் செய்யும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
Julie

Latest Videos

click me!