விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜாக்குலின். அந்நிகழ்ச்சியை ரக்ஷன் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய ஜாக்குலின், அடுத்ததாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். கடந்த 2018-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜாக்குலின். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
24
ஜாக்குலின் பிறந்தநாள்
கோலமாவு கோகிலா படத்திற்கு பின் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜாக்குலின் அதன் பின் சினிமா பக்கமே தலைகாட்டவில்லை. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். அந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தேன்மொழி சீரியலுக்கு பின் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஜாக்குலின், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார்.
இந்த சீசனில் சண்டைக்கோழியாக வலம் வந்த ஜாக்குலின், போகப் போக ரசிகர்களின் மனம்கவர்ந்த போட்டியாளராக மாறினார். இந்த சீசனில் ஜாக்குலின் படைத்த சாதனைகள் ஏராளம். அதில் ஒரு தரமான சாதனையும் உண்டு. அது என்னவென்றால் பிக் பாஸ் வரலாற்றிலேயே அந்நிகழ்ச்சி நடைபெற்ற 15 வாரமும் நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார் ஜாக்குலின். அதுமட்டுமின்றி இத்தனை வாரங்கள் நாமினேட் ஆனாலும் அவர் இறுதிவரை மக்களால் வெளியேற்றப்படவில்லை.
44
ரயான் மற்றும் செளந்தர்யா உடன் ஜாக்குலின்
பணப்பெட்டியை எடுக்க சென்ற போது குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வர முடியாததால் அவர் எலிமினேட் ஆனார். இதனால் பைனல் மேடை ஏறும் வாய்ப்பை நழுவவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஜாக்குலின். அப்போது அவரின் கோவா கேங் நண்பர்களான ரயான் மற்றும் செளந்தர்யா, சர்ப்ரைஸாக வந்து கேக் வெட்டி ஜாக்குலினின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.