முதலில் அதை நிறுத்து... மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவிற்கு வனிதா சொன்ன அட்வைஸ்...!

Published : Aug 04, 2021, 07:23 PM IST

யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியின் மரணம் குறித்த குற்ற உணர்ச்சியில் சிக்கி தவிப்பது குறித்து வனிதா விஜயகுமார் அட்வைஸ் கூறியுள்ளார். 

PREV
16
முதலில் அதை நிறுத்து... மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவிற்கு வனிதா சொன்ன அட்வைஸ்...!
Yashika anand

கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது.

26
yashika

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. 

36
Yashika anand

விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

46
Yashika anand

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். 

56

அதேபோல் விபத்தின் போது தான் குடிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், எழுந்து நடக்கவே 5 மாதமாகும் என்றும் யாஷிகா தன்னுடைய உடல் நிலை குறித்து வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

66

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு சரியான ரீ-எண்ட்ரியாக அமைந்தது.  மேலும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி, டைட்டில் வின்னராகவும் மாறினார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியின் மரணம் குறித்த குற்ற உணர்ச்சியில் சிக்கி தவிப்பது குறித்து வனிதா விஜயகுமார் அட்வைஸ் கூறியுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories