GP MUTHU with sunny leone : ஓ மை கோஸ்ட் விழாவில் மாஸ் காட்டும் பிக்பாஸ் பிரபலங்கள்

Published : Nov 03, 2022, 04:06 PM ISTUpdated : Nov 03, 2022, 04:07 PM IST

டிரைலர் வெளியீட்டு விழாவில் சன்னிலியோனுடன் ஜி பி முத்து அடிக்கும் லூட்டியும் கேக் ஊட்டி விடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

PREV
17
GP MUTHU with sunny leone :  ஓ மை கோஸ்ட் விழாவில்  மாஸ் காட்டும் பிக்பாஸ் பிரபலங்கள்
oh my ghost

ஆபாசப்பட நடிகையாக இருந்து பிரபலமானவர் சன்னிலியோன். இந்திய வம்சாவளியை  சேர்ந்த இவர் கனடாவில் பிறந்து வளர்ந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் ஆபாச படங்களை நடிப்பதில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று விட்டார்.

 முன்னதாக இவர் வெளியிட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தது. இவரை நாடு கடத்த வேண்டும் என்கிற அளவுக்கு சர்ச்சை முற்றிப்போனது. இதைத்தொடர்ந்து தனது பாணியை மாற்றிக் கொண்டார் சன்னி லியோன். 

27
oh my ghost

இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். பாலிவுட் பக்கம் இருந்த இவர் தற்போது கோலிவுட் பக்கமும் தனது பார்வையை திருப்பி உள்ளார். முன்னதாக மலையாள படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...bharathi kannamma : என்னது பாரதிக்கும்..வெண்பாவுக்கும் திருமணம் ஆகிடுச்சா? வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்

37
oh my ghost

தற்போது தமிழில் வடகறி, ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில்  ராணி வேடத்தில் தோன்றியுள்ளார் இவர். இது குறித்தான டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தி இருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

47
oh my ghost

கவர்ச்சி பேய்  என பலரும் பாராட்டி வந்தனர். இந்த படத்தில் விஜய் டிவி புகழ் தர்ஷா குப்தா, ஜி பி முத்து, சதீஷ், சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக உருவாக்கியுள்ளது.

57
oh my ghost

இந்த படத்தை சிந்தனை செய் படத்தின் இயக்குனரான ஆர் யுவன் இயக்கியுள்ளார். இதற்கான இசையை ஜாவேத் ரியாஸ் அமைத்துள்ளார். இன்று இந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் ஜிபி முத்து, தர்ஷா குப்தா மற்றும் பிக் பாஸ் புகழ் ஜூலி கலந்து கொண்டுள்ளனர்.

67
oh my ghost

இவர்களது புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட ஜிபி முத்து தான் வெற்றியாளராக வருவார் என பலரும் கூறி வந்த நிலையில் தனது பிள்ளையை பார்க்க வேண்டும் என கூறி சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அந்த வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து தனது பிள்ளைகளுடன் இருக்கும் வீடியோக்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு வந்தார்.

77
oh my ghost

இந்த நிலையில் ஓ மை கோஸ்ட் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்து கலக்கி வரும் ஜிபி முத்துவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தாலும், இதற்காகத்தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வந்தீர்களா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். டிரைலர் வெளியீட்டு விழாவில் சன்னிலியோனுடன் ஜி பி முத்து அடிக்கும் லூட்டியும் கேக் ஊட்டி விடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories