“வாடா போடா” என ஒருமையில் பேசிய சனம் ஷெட்டி... பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முடிவெடுத்த சுரேஷ்?

First Published | Oct 21, 2020, 9:00 PM IST

இதனை அடுத்து கன்ஃபக்சன் ரூமுக்கு சுரேஷை அழைத்து பிக்பாஸ் விசாரணை செய்தும் அங்கு பிக்பாஸ் முன் சுரேஷ் கதறி அழுததுமான காட்சிகள் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடந்து வரும் காடா... நாடா... டாஸ்கில் சனம் ஷெட்டி சுரேஷ் சக்ரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதை தராமல், வாடா, போடா என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரை, அண்ணா அண்ணா என அவரை சுற்றி வந்து ரொம்ப மரியாதையான பெண்ணாக இருந்த, சனம் ஷெட்டியின் சுய ரூபம் இந்த டாஸ்க் மூலம் வெளியே வர துவங்கியுள்ளதாகவே, இன்றைய எபிசோடு இருக்கும் என தெரிகிறது.
Tap to resize

இன்று வெளியான புரோமோ ஒன்றில் அரக்கர்கள் குழு ஒன்று சேர்ந்து ராஜ வம்சத்தை சேர்ந்த ஆஜித்தை தொந்தரவு செய்கிறார்கள். ஆஜித்தை தொந்தரவு செய்வதை ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பார்க்க கூடாது என, கருப்பு நிற திரை ஒன்றும் கட்டப்படுகிறது.
பின்னர் சுரேஷ் எதையோ வைத்து சனத்தில் கையில் தாக்கியபோது அது அவரது நெற்றியில் படுகிறது.இதனால் கடுப்பான சனம் ஷெட்டி கொஞ்சம் கீழே பட்டிருந்தால் கண்ணே போயிருக்கும், அவன் கொடுப்பானா? என கோவமாக கத்துகிறார்.
மேலும் சனம் சுரேஷ் சக்ரவர்த்தியின் வயதை கூட கருத்தில் கொள்ளாமல் ஹேய் நீ வெளில வாடா இப்போ என கூறுகிறார். சனம் ஷெட்டியின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பரவுகிறது.
இதனை அடுத்து கன்ஃபக்சன் ரூமுக்கு சுரேஷை அழைத்து பிக்பாஸ் விசாரணை செய்தும் அங்கு பிக்பாஸ் முன் சுரேஷ் கதறி அழுததுமான காட்சிகள் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதையடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாக சுரேஷ் சக்கரவர்த்தி தெரிவித்து வருவதாகவும், அவரை வெளியேற்றுவது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு குழு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos

click me!