சவுத் ஸ்லாங் மிகப்பெரிய சவாலாக இருந்தது...அருண்விஜய்யின் சுவாரஸ்ய பேட்டி!

Kanmani P   | Asianet News
Published : Jun 04, 2022, 07:46 PM IST

நடிகர் அருண்விஜய் யானை படத்தில் தென்னகத்து நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக அங்குள்ள ஸ்லாங்கை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாக கூறியுள்ளார்.

PREV
14
சவுத் ஸ்லாங் மிகப்பெரிய சவாலாக இருந்தது...அருண்விஜய்யின் சுவாரஸ்ய பேட்டி!
yaanai movie

அருண் விஜய் தனது அடுத்த யானை படத்தில் தனது தோற்றத்திற்காக நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறார். சமீபத்தில் படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். ஹரி இயக்கிய  தமிழ் ஆக்ஷன்-த்ரில்லரான யானை படத்தில் அருண் விஜய் மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிததுள்ளனர்.

24
yaanai movie

 ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் வெளியான படத்தின் புதிய போஸ்டர்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ரசிகர்கள் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் போஸ்டரைப் பகிர்ந்து வருகின்றனர்.

34
yaanai movie

டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றி அருண் விஜய் பகிர்ந்துகொண்டார், “யானை படத்தின் ட்ரெய்லருக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த அற்புதமான வரவேற்பைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏற்கனவே 3.2 மில்லியனைத் தாண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரை இது பெரிய நட்சத்திர பட்டாளம் மற்றும் பெரிய இயக்குநரைக் கொண்ட பெரிய படம். நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமப்புற ஸ்கிரிப்டை செய்கிறேன், இந்த அவதாரத்தில் என்னைப் பார்க்க பார்வையாளர்கள் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள், ஏனென்றால் தென்னிந்திய ஸ்லாங்கை மாற்றியமைப்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. ஹரி சார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வருகிறார். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு என் படம் திரையரங்குகளில் வெளிவருவதால், எனக்கு உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் தெற்கில் ஒரு விரிவான பிரச்சாரத்தை செய்கிறோம். இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய படமாக இருக்கும், படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் உள்ளன. அதையெல்லாம் நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. என கூறியுள்ளார்.

44
yaanai movie

யானை மூலம் அருண் விஜய் மீண்டும் மில்லியன் கணக்கான இதயங்களை வெல்லப் போவதாகத் தெரிகிறது. யானையுடன், அக்னி சிறகுகள் மற்றும் சினம் ஆகிய படங்களில்  வெளியாகவுள்ளது. இதுகுறித்து அவரது இஅவரது ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகமான  உள்ளனர்.

click me!

Recommended Stories