‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்...!

First Published | Mar 22, 2021, 7:37 PM IST

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்து பிரபலமான முன்னணி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்குப் பிறகு ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் உள்ளது.
குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பலரின் கவனமும் பாரதி கண்ணம்மா சீரியல் பக்கம் திரும்பியது.
Tap to resize

இந்த சீரியலில் கதாநாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கடேஷ் மாரடைப்பால் இன்று மதியம் 2.30 மணிக்கு மரணமடைந்தார் என்ற செய்தி ரசிகர்களையும், சின்னத்திரை பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் ரச்சிதா மஹாலக்ஷ்மிக்கு அப்பாவாக நடித்து வந்த வெங்கடேஷ், அதன் பின் டிஆர்பி-யில் முன்னணியில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு அப்பாவாக நடித்த வந்தார். மேலும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்தார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான செல்லம்டி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியிருந்தாலும், வெங்கடேஷுக்கு அதிக பிரபலத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் சரவணன் மீனாட்சி சீரியல் தான் பெற்றுத்தந்தது.
இன்று காலை காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் உயிரிழந்த நிலையில், அடுத்ததாக வெங்கடேஷின் மரணமும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. வெங்கடேஷ் மரணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது சோசியல் மீடியா பக்கம் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos

click me!