ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சோனு சூட் புகைப்படம்..! எல்லாம் சாத்தியம் மனம் நெகிழ வைத்த நடிகர்!

First Published Mar 21, 2021, 7:13 PM IST

தன்னலம் கருதாது, ஏழை, எளிய, மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து பல உதவிகளை, செய்து வந்த சோனு சூட்டை பெருமை படுத்தும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன்னுடைய விமானத்தில், சோனு சூட் போஸ்டரை ஒட்டியுள்ளது. இதற்க்கு சோனு சூட் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
 

அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார்.
undefined
அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
undefined
இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சோனு சூட்டிற்கு, தற்போது திரையிலும் நல்ல காலம் ஆரம்பித்துள்ளது. அதாவது ஹீரோவாக நடிக்க பல படங்களில் வாய்ப்பு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தன்னலம் கருதாது எளிய மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கூட உதவ வேண்டும் என முடிவெடுத்துள்ள சோனு சூட்டை அவரது ரசிகர்கள் கோவில் கூட கட்டி விட்டனர்.
undefined
இன்னிலையில், இவரை கௌரவிக்கும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் சோனுசூட்டின் பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது. இப்படி ஒரு சிறப்பை பெறும் முதல் இந்திய நடிகர் சோனு சூட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
இதுகுறித்து சோனுசூட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ வைக்கும் வார்த்தைகளால் நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய பெற்றோர்களின் பிரார்த்தனை மட்டும் உங்களுடன் இருந்தால் எதுவும் சாத்தியம் தான் என அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவுக்கு இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!