நடிகர் கார்த்திக்கு இந்த நிலையா? நடக்க கூட முடியாமல் சக்கர நாற்காலில் செல்லும் அதிர்ச்சி புகைப்படங்கள்!

First Published | Mar 21, 2021, 12:58 PM IST

நடிகர் கார்த்தி, திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

'மனித உரிமை காக்கும்' கட்சியின், நிறுவனரும், நடிகருமான கார்த்திக் நேற்று இரவு தீர் மூச்சுத்திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அதற்கான தேர்தல் பணிகளில் நேற்று இரவு ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tap to resize

மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கார்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பெட்டில் அனுமதிக்க பட்டுள்ள நடிகர் கார்த்திக்
முகத்தில் மாஸ்க்குடன், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் செல்லும்... நடிகர் கார்த்திக்
80 களின்... காதல் மன்னன்... நடிகர் கார்த்திக்கு இந்த நிலையா? மனம் குமுறும் ரசிகர்கள்

Latest Videos

click me!