பாரதி கண்ணம்மா சீரியலில் இனி அகிலனுக்கு பதில் நடிக்க போவது இவர்தான்... வைரலாகும் புகைப்படம்..!

First Published | Aug 17, 2021, 2:44 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களில் ஒன்றான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து நடிகர் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விலகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு பதில் மற்றொரு பிரபலம் கமிட் ஆகியுள்ளார். அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவி.யில் டாப் ரேட்டிங் கொண்ட இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tap to resize

அந்த வகையில் கதாநாயகனாக நடிக்கும் பாரதிக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வரும், அகிலனுக்கு பாரதியை காட்டிலும் பெண் ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர்.

இவருக்கு தற்போது அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாலும், சிறிய வயதில் இருந்தே வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வருவதாலும் இவர் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இவருக்கு ஜோடியாக நடித்து வரும் அஞ்சலி... தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்வது போல் மீம்ஸ் ஒன்றை போட்டு இனி இவற்றை மிஸ் செய்வேன் என தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் அகிலனுக்கு பதில் மற்றொரு பிரபலம் உள்ளார் இதன் மூலம் இவருக்கு பதில் யார்? அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!