இப்படி ஒரு காலேஜா? எம்புரான் படத்துக்காக லீவும் விட்டு டிக்கெட்டும் Free-யா கொடுத்த கல்லூரி!

Published : Mar 25, 2025, 10:40 AM ISTUpdated : Mar 25, 2025, 10:44 AM IST

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் படம் ரிலீஸ் ஆகும் நாளன்று ஒரு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

PREV
15
இப்படி ஒரு காலேஜா? எம்புரான் படத்துக்காக லீவும் விட்டு டிக்கெட்டும் Free-யா கொடுத்த கல்லூரி!

College Leave For Empuraan Movie Release : மலையாள படங்களுக்கு கேரளா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் சமீப காலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு காரணம் அங்கு தொடர்ந்து நல்ல கதையம்சத்தோடு படங்கள் வருவது தான். அந்த வரிசையில் தற்போது மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் சில கம்பெனிகள் விடுமுறை அறிவித்து பார்த்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக எம்புரான் படம் ரிலீஸ் ஆகும் நாளன்று ஒரு கல்லூரி விடுமுறை அறிவித்திருக்கிறது.

25
College Holiday for Empuraan Release

நீங்க நம்பலேனாலும் அது தான் நிஜம்... பெங்களூருவின் குட் ஷெப்பர்டு கல்லூரி, மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் வெளியாகும் நாளான மார்ச் 27-ம் தேதியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. தங்கள் கல்லூரி மாணவர்கள் பெரிய திரையில் எம்புரான் திரைப்படத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...தமிழ்நாட்டில் வீர தீர சூரனை விட டபுள் மடங்கு வசூல்; முன்பதிவில் மாஸ் காட்டும் எம்புரான்!

35
Empuraan Movie

அந்த கல்லூரியின் சேர்மன் மோகன்லாலின் தீவிர ரசிகராம். அதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். லீவு விட்டது மட்டுமின்றி அதற்கு இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ள அந்த கல்லூரி நிர்வாகம், தங்கள் கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு காட்சியையும் ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஒய்ஜிஆர் மாலில் அமைந்துள்ள மூவிடைம் சினிமாஸில் காலை 7 மணிக்கு இந்த சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

45
Prithviraj, Mohanlal

இதற்காக மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாம். இது குறித்து அந்த கல்லூரி நிர்வாகம் சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவில், "உற்சாகமும், ரசிகர்களும் ஒன்று சேர்ந்தால் வரலாறு உருவாகும்! லாலேட்டனின் விசுவாசமான ரசிகரான எங்கள் எம்டி, மோகன்லால் அவர்களின் திறமையையும், பிருத்விராஜ் சுகுமாரன் அவர்களின் இயக்கத்தையும் கவுரவிக்கும் வகையில் எம்புரான் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல - இது ஒரு நிகழ்வு!" என்று பதிவிட்டுள்ளது. 

55
Mohanlal's Empuraan

அதே போல் சில கம்பெனிகளும் எம்புரான் படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர், 2023-ல் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியானபோது, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள பல நிறுவனங்கள் அதன் ரிலீஸ் தினத்தன்று படத்தை பார்க்க தங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தது. சிலர் தங்கள் ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை விநியோகம் செய்தனர். ஆனால், ஒரு கல்லூரி நிர்வாகம் பட ரிலீசுக்காக விடுமுறை அறிவித்துள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... டிக்கெட் புக்கிங்கில் விஜய்யின் லியோ சாதனையை முறியடித்த மோகன்லாலின் எம்புரான்!

Read more Photos on
click me!

Recommended Stories