கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட காமெடி கலந்த ஆக்ஷன் படங்களை ரசிகர்ளுக்கு தந்த நெல்சன் தற்போது விஜயின் புல் டைம் ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்கியுள்ளார்.
28
beast trailer
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, வில்லனாக ஷான் டாம் சாக்கோ, துணை வேடத்தில் யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
38
beast trailer
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
48
beast trailer
முன்னதாக அனிரூத் இசையில் வெளியான அரபிக் குத்து செம ஹிட் கொடுத்தது. இந்த பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியிருந்தார். பின்னர் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் சொந்த குரலில் பாடியிருந்தார்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்திற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆக்ஷன் அதிகமுள்ள கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது.
68
beast trailer
வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இதையடுத்து தற்போது பீஸ்ட் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விஜயின் முந்தைய படமான துப்பாக்கி படம் போல சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய் ) பெரிய மாலில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்றும் ஆக்ஷன் பறக்கும் சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
88
beast trailer
இந்நிலையில் பீஸ்ட் ட்ரைலர் வலிமை ட்ரைலரை தோற்கடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை வெளியான 10 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. ஆனால் பீஸ்ட் வெளியிடப்பட்ட 5 நிமிடத்தில் 1மில்லியன் ரியல் டைம் பார்வையாளர்களை பெற்று விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.