மீண்டும் இணையும் சமந்தா- நாகசைதன்யா ஜோடி..இயக்குனரின் விடா முயற்சிதான் காரணமாம்..

Published : Apr 02, 2022, 05:35 PM ISTUpdated : Apr 02, 2022, 05:40 PM IST

விவாகரத்து  செய்துகொண்ட சமந்தா நாகசைதன்யா இருவரும் மீண்டும் வெள்ளித்திரையில் இணையவுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

PREV
18
மீண்டும் இணையும் சமந்தா- நாகசைதன்யா ஜோடி..இயக்குனரின் விடா முயற்சிதான் காரணமாம்..
samantha - Naga Chaitanya

நட்சத்திர ஜோடிகளா வலம் சமந்தா- நாகசைதன்யா இருவரும் ‘‘எம் மாய சேசவே’  என்னும் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா? படத்தின் தெலுங்கு பதிப்பான இந்த படத்தையும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கியிருந்தார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

28
samantha - Naga Chaitanya

முன்னதாக ஆட்டோநகர் சூர்யா, மனம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும்   ‘‘ஏ மாய சேசவே’ படம் தான் இவர்களது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அங்குதான் இவர்களின் காதல் கதை தொடங்கியது.  நட்பாக ஆரம்பித்த இவர்களது உறவு, காதலாக மாறி, 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.

38
samantha - Naga Chaitanya

அப்போது வளரும் நாயகியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தாவின் திருமணம் விமர்சியாக நடைபெற்றது. பிரபலங்கள் கலந்து கொண்ட  இந்த திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் கமிட் ஆகி வந்தார். 
 

48
samantha - Naga Chaitanya

சமந்தா - நாகசைதன்யா இருவரது திருமணமும்  இந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் இரண்டு முறை திருமணம் நடைபெற்றது. அதோடு இவர்களது திருமணம் டோலிவுட்டின் மிக ஆடம்பரமான திருமணங்களில் ஒன்றாக மாறியது.
 

58
samantha - Naga Chaitanya

நட்சத்திர இளம் தம்பதிகளாக வலம் வந்த இருவரும் தங்களது ரோமன்ஸ் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு சிங்கிள்ஸை கடுப்பேத்தி வந்தனர். இருவரும்  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஒன்றாக  பரஸ்பர ஜோடிகளாக வாழ்ந்தனர். திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் படு பிஸியாக இருந்த இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து பற்றி அறிவித்தனர்.

68
samantha - Naga Chaitanya

சமந்தா- நாகசைதன்யா இருவரும் இணைந்து   படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இவர்கள் கடைசியாக   'ஓ பேபி' படத்தில் நடித்திருந்தனர். சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில் நாகசைதன்யா  கெஸ்ட் ரோலில் நடித்தார்.  அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.

78
samantha - Naga Chaitanya

இந்நிலையில் இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஓ பேபி படத்தை இயக்கிய பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி மீண்டும் இருவரை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக நாகசைதன்யா மற்றும் சமந்தாவை சம்மதிக்க வைக்கும் வேலையில் நந்தினி ரெட்டி ஈடுபட்டுள்ளதாக தகவல்.  இதற்கு சைதன்யா  தரப்பிலிருந்து பாசிட்டிவ் பதில் கிடைத்துள்ளதாகவும், சமந்தாவை சம்மதிக்க வைக்க நந்தினிரெட்டி தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

88
samantha - Naga Chaitanya

தற்போது சமந்தாநடித்துள்ள சகுந்தலம், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.  அதோடு ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ஒரு சர்வதேச படத்திலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.  அதேபோல நாகசைதன்யா `நன்றி` படத்திலும், வெப் சீரிஸுலும் நடிக்கவுள்ளார்..  

Read more Photos on
click me!

Recommended Stories