உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பீஸ்ட்... ஓடிடியில் பட்டையை கிளப்பி மாஸ் சம்பவம்!

Kanmani P   | Asianet News
Published : May 19, 2022, 11:23 AM ISTUpdated : May 19, 2022, 11:27 AM IST

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

PREV
15
உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பீஸ்ட்... ஓடிடியில் பட்டையை கிளப்பி மாஸ் சம்பவம்!
beast

கோலமாவு கோகிலா, டாக்டர் என ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் நெல்சன் சமீபத்தில் இயக்கிய பீஸ்ட் படத்தில் ராணுவ வீரராக விஜய் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே வந்திருந்தார். இவர்களுடன் செல்வராகவன் , ஷைன் டாம் சாக்கோ , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி , VTV கணேஷ் , ஷாஜி சென் , அபர்ணா தாஸ் , சதீஷ் கிருஷ்ணன் , லில்லிபுட் மற்றும் அங்கூர் அஜித் விகல் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே தோன்றியிருந்தனர்.

25
beast

 நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படித்தது பீஸ்ட் .படம் வெளியாகும் முன்னரே அரபிக் குத்து பாடல் முதல் சிங்குளாக வெளியாகி ரசிகர்களை குதுக்கப்படுத்தியது. இந்த பாடல் ரீல்ஸ் வடிவில் பட்டி தொட்டியெல்லாம் பரவியது.

35
beast

அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டிருந்தார். சென்னை ,டெல்லி மற்றும் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றிருந்தது. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி உலகமெங்கும் பீஸ்ட் திரையிடப்பட்டது. 

45
beast

திரையரங்கை தொடர்ந்து இப்படம் அண்மையில் ஓடிடி-யில் வெளியானது. ராணுவ வீரராக வரும் விஜய்  போர் விமானத்தை ஓட்டும் காட்சியை பார்த்த விமானப்படை அதிகாரிகள், அதில் உள்ள லாஜிக் ஓட்டைகளை சுட்டிக்காட்டினர். குறிப்பாக பீஸ்ட் படத்தில் விஜய் போர் விமானத்தை ஓட்டும் காட்சியை டுவிட்டரில் பகிர்ந்திருந்த விமானப்படை அதிகாரி ஒருவர், கடுமையாக விமர்சித்திருந்தார்.

55
beast

இதையடுத்து பீஸ்ட் படத்திலிருந்து விமர்சனத்திற்கு ஆளான அந்த காட்சிகளை நீக்கியுள்ள நெட்ப்ளக்ஸ் பீஸ்ட் படத்தின் புதிய சாதனையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வார பட்டியலில் முதல் பத்து இடங்களில் இரண்டு இடங்களை பீஸ்ட் பிடித்துள்ளது. அதன்படி RAW (பீஸ்ட் ஹிந்தி) 5 இடத்திலும், பீஸ்ட் (தமிழ்) 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.    
 

Read more Photos on
click me!

Recommended Stories