70ஸ் இளசுகளை கவர்ந்திழுத்த கவர்ச்சி கன்னி சில்க்கிற்கு நிகராக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் டிஸ்கோ சாந்தி. இவரின் நடனம் 80களில் மிகவும் பிரபலம். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.