அட விஜய் சேதுபதி சம்பளம் இவ்வளவு தானா? காத்துவாக்குல வெளியான தகவல்

Kanmani P   | Asianet News
Published : May 19, 2022, 08:46 AM IST

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர்  வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

PREV
15
அட விஜய் சேதுபதி சம்பளம் இவ்வளவு தானா? காத்துவாக்குல வெளியான தகவல்
KaathuvaakulaRenduKaadhal

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த விஜய் சேதுபதி இங்கு மட்டுமல்லாமல் டோலிவுட்டிலும் மிகவும் பிரபலம். இவர் தனக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணுவதில்லை. ஹீரோவாகவும் வில்லனாகவும், சிறப்பு வேடத்தில் என நடித்து வரும் இவர் தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து தற்போது சமீபத்தில் வெளியான காத்து வாக்கில் ரெண்டு காதல் படத்தில் நாயகனாக நடித்து பாராட்டுக்களை குவித்திருந்தார் விஜய் சேதுபதி.

25
kaathu vaakula rendu kadhal

கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான்செம ஹிட் கொடுத்தது. அறிமுக இயக்குனராக இருந்த விக்கிக்கு நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது இதையடுத்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி இருந்த விக்னேஷ் தற்போது மீண்டும் தனது வெற்றி கூட்டணியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார்.

35
kaathu vaakula rendu kadhal

இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் காதல் சின்னமாக உருவாகியுள்ள  ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதியின் முக்கோண காதலாக உருவான இந்த படம் நல்ல பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனை பெற்றது. 

45
KaathuVaakula Rendu Kaadhal

இந்த திரைப்படத்தில் கண்மணியாக நயன்தாரா மற்றும் கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தா ஜோடி ஏற்று நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில்  உலகம் முழுவதும்படம்  ரூ 56  கோடிக்கு மேலாக வசூல்  வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான, 96 படம் உலகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்திருந்தது காத்துவாக்குல இரண்டு காதல் படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது. 

55
KaathuVaakula Rendu Kaadhal

இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி சுமார் ரூ. 8 கோடி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகால நாயகர்களே 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசி வரும் நிலையில் 10 கோடிக்கும் குறைவாக சம்பளம் விஜய் சேதுபதி சம்பளம் பெற்றிருப்பது சமூக வலைதளத்தின் சூடான செய்தியாகிவிட்டது. 

Read more Photos on
click me!

Recommended Stories