Samyuktha Hegde :டூபீஸில் டூ மச் கிளாமர்! திடீரென பிகினி போஸ் கொடுத்து ரசிகர்களை பக்குனு ஆக்கிய கோமாளி நடிகை

First Published May 18, 2022, 4:04 PM IST

Samyuktha Hegde : பிகினி உடை அணிந்து நீச்சல் குளம் அருகே அமர்ந்தவாரு போஸ் கொடுத்து நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. இப்படத்தில் நடிகை ராஷ்மிகாவும் மற்றொரு ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானதை அடுத்து இது தெலுங்கிலும் கிராக் பார்ட்டி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் சம்யுக்தா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் பாப்புலர் ஆன இவர், அடுத்ததாக வருண் ஜோடியாக பப்பி படத்தில் நடித்தார்.

பப்பி திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அவர்களை கவரும் விதமாக நடிகை சம்யுக்தா ஹெக்டே அடுத்ததாக நடித்த படம் தான் மன்மத லீலை. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா. இப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அதில் அவ்வபோது தனது புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அண்மையில் பிகினி உடை அணிந்து நீச்சல் குளம் அருகே அமர்ந்தவாரு போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சிலரோ இது ரொம்ப டூ மச் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... The Legend Movie : வாடிவாசல் ரிலீஸ் தேதியை அறிவித்த லெஜண்ட் சரவணன் - ஷாக் ஆன சூர்யா ரசிகர்கள்

click me!