Bayilvan Ranganathan about Madhampatty Rangaraj 2nd Marriage
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், சினிமாவிலும் மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆகி உள்ளது. அவர் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படமும் வெளியாகி வைரல் ஆனது. அதுமட்டுமின்றி தான் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் ஜாய் கிரிசில்டா வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
24
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பயில்வான் சொன்னதென்ன?
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் பற்றி பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசுகையில், மாதம்பட்டி ரங்கராஜை பாடி டிமாண்ட் கிங் என கூறி இருக்கிறார். அவர் விவாகரத்தாகி, கணவனை விட்டு பிரிந்த நடிகைகள் மீது தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஆர்வமாக இருப்பார் என பயில்வான் தெரிவித்துள்ளார். அவர்களுடன் டேட்டிங் செல்வார் என்றும், அவர் ஏற்கனவே மூன்று நடிகைகளுடன் லிவ்விங் டூகெதராக வாழ்ந்திருக்கிறார் என்கிற திடுக் தகவலையும் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கிறார். திருமணமான பின்னர் தான் அந்த 3 நடிகைகளுடன் அவர் லிவ்விங் டூகெதராக இருந்தாராம்.
34
மாதம்பட்டி ரங்கராஜ் வசமா வலையில் மாட்டிக்கிட்டார்
தொடர்ந்து பேசிய பயில்வான் கூறியதாவது : மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் தொழில் மட்டும் செய்துவந்தபோது நல்லா தான் இருந்தார். சினிமாவில் நடிக்க வந்த பின்னர் தான் விவாகரத்தான நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார். இதில் கிசில்டா லேட்டஸ்டாக வந்தவர். அவர் கர்ப்பமாகி 6 மாதங்கள் ஆனதால் மாதம்பட்டி ரங்கராஜ் வசமா வலையில் மாட்டிக்கிட்டார். அதனால் கோவிலுக்கு கூட்டிட்டு போய் இருவரும் மாலையை மாற்றிக்கொண்டார்கள் அவ்வளவுதான். இதை திருமணம்னு நினைச்சிட்டு இருக்கோம். ஆனால் அது திருமணம் அல்ல என பயில்வான் கூறி உள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது : இந்து மத அறநிலையத்துறையில் திருமணத்தை பதிவு செய்ய பல சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அதன்பின்னர் ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்தால் தான் முறைப்படி திருமணம் செல்லுபடியாகும். இவ்வளவு வேலைகள் இருக்கையில், இவர்கள் மாலையை மாற்றிக் கொண்டதோடும், தாலி கட்டிக்கொண்டதோடும் சரி. அதுமட்டுமின்றி ஜாய் கிரிசில்டா ஒரு கிறிஸ்தவர். அவரை இந்து கோவிலில் வைத்து திருமணம் செய்துகொள்ள இந்து அறநிலையத்துறை ஒத்துக்கொள்ளாது. அதனால் இது திருமணமே இல்லை. இது ஒரு செட்டப் அவ்வளவுதான். இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என தெரிவித்துள்ளார்.