
Dulquer Salmaan Top 7 Best OTT Movies : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். செகண்ட் ஷோ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் துல்கர் சல்மான் கடைசியாக லக்கி பாஸ்கர் படத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் எத்தனையோ ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் லோகா சாப்டர் ஒன்: சந்திரா, காந்தா, ஆகாஷம் லோ ஓ தாரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஏராளமான படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானின் டாப் பெஸ்ட் படைப்புகளை ஓடிடியில் பார்க்க வேண்டிய படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சீதா ராமம். 1960ஆம் ஆண்டு நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தில் துல்கர் சல்மான் இந்திய இராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ராமாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சீதா என்ற ரோலில் நடித்த மிர்ணல் தாக்கூரிடமிருந்து கடிதம் வரவே அவரை தேடி புறப்பட்டுச் செல்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட கதை. இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மன், ராம்கி, மீனாக்ஷி சௌத்ரி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் லக்கி பாஸ்கர். வங்கியில் கேஷியராக வேலை பார்க்கும் துல்கர், ராம்கி மூலமாக எதிர்பாராத விதமாக குறுக்கு வழியில் பெரிய கோடீஸ்வரராக மாறுகிறார். அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது, வங்கியில் ஏதேனும் பணத்தை அபேஸ் செய்தாரா இல்லையா என்பது தான் படத்தோட மீதி கதை. துல்கர் சல்மானின் சினிமா நடிப்பில் முக்கியமான படமான இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஒரு ரேஸராக நடித்துள்ளார். காதல் மற்றும் ஃப்ரண்ட்ஷிப் கதையை மையப்படுத்திய இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக இப்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது.
துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஆன்லைன் மோசடி, திருட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
இயக்குநர் மார்ட்டின் பிரக்கட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி, அபர்னா கோபிநாத், நெடுமுடி வினோத் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் சார்லி. மர்மமான மனிதர் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில் துல்கர் சல்மான் வித்தியாசமான ரோலில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தை இப்போது சன்நெக்ஸ்ட் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.
இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான், சோபிதா துலிபாலா, இந்திரஜித் சுகுமாரன், விஜயராகவன் ஆகியோர் பலர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் குரூப். ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.78 கோடி வரையில் வசூல் குவித்தது. க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. இந்தப் படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்டிரீம் செய்யப்படுகிறது.