அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு சான்ஸ் கொடுத்து வந்த காலம் மாறி இப்போது இளம் இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்று மாஸ் ஹீரோக்கள் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படம் குறித்து தினந்தோறும் புதிய புதிய தகவல் கசிந்த வண்ணம் இருக்கிறது.
24
கூலி, ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கூலி படத்தின் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.
34
கூலி இசை வெளியீட்டு விழா
ஏற்கனவே மோனிகா, கூலி டிஸ்கோ, சிக்கிட்டு, பவர்ஹவுஸ் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. பாடல்கள் மட்டுமே வெளியாகி வந்த சூழல் டீசர் மற்றும் டிரைலர் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை டீசர், டிரைலர் வெளியாகாதோ என்ற எண்ணம் கூட தோன்றியது.
44
கூலி படத்தின் டீசர்
இந்த நிலையில் தான் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கூலி படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படியில்லை என்றால் நேரடியாக டீசர் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.