
சோசியல் மீடியா பக்கம் சென்றாலே ஹாட் டாப்பிக் ஆக உள்ள மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் தான். அவர் ஜாய் கிரிசில்டா என்கிற ஆடை வடிவமைப்பாளரை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் வெளியானது. திருமண புகைப்படம் வெளியான அடுத்த நாளே, தங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜாய் கிரிசில்டா. இந்த திருமணம் பற்றி மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை வாய்திறக்கவில்லை. இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய பகீர் ரகசியங்களை சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பயில்வான் கூறியதாவது : “நான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை கல்யாணம் பண்ண போகிறார். இருவரும் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர் முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யவில்லை என்கிற விஷயத்தை சொல்லி இருந்தேன். யூடியூப் சேனலுக்கு நான் பேசிய தகவல் மாதம்பட்டி ரங்கராஜின் காதுக்கு சென்றுவிட்டது. உடனே அவர் அந்த யூடியூப் சேனலை தொடர்பு கொண்டு, தயவு செய்து என் வாழ்க்கையை கெடுத்துவிடாதீர்கள். அது இதுனு சொல்லி அந்த பேட்டியை ஒளிபரப்பவிடாமல் செய்துவிட்டார். ஆனால் நான் அன்று சொன்னது இப்போ உண்மையாகிடுச்சு.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு முன்னரே மாதம்பட்டி சிவக்குமார் என்கிற கோடீஸ்வரர் இருந்தார். அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். நடிகர் சத்யராஜுக்கு அவர் அண்ணன் முறை வேண்டும். அதனால் அவர் தன்னுடைய இளமை காலங்களை அங்கு தான் கழித்தார். மாதம்பட்டி சிவக்குமாருக்கு அடுத்தபடியாக அங்கிருந்து வந்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் கோவையை சேர்ந்தவர். இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தங்கள் குடும்ப தொழிலான சமையல் தொழில் கால்வைக்க ஆசைப்பட்டு பெங்களூருவில் ஓட்டல் திறந்தார் அது மிகவும் சக்சஸ் ஆனது.
அதன்பின்னர் மாதம்பட்டிக்கு வந்து நிறைய கல்யாண கேட்டரிங் ஆர்டர்களை எடுத்து செய்து வந்தார். குறிப்பாக பெரிய பெரிய சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என பெரிய கோடீஸ்வரர்கள் வீட்டு கல்யாண ஆர்டர்களை எடுத்து பாப்புலர் ஆனார். அவருக்கு கலையான முகம். அதனால் மெஹந்தி சர்க்கஸ் படம் மூலம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். எப்பவுமே ஹீரோவாக நடிப்பவர்கள் தங்கள் பாடி டிமாண்டை தங்களது கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும். அது எல்லைமீறி சென்றுவிட்டால் அவ்வளவு தான் குளோஸ் ஆகிவிடுவார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை நிர்பந்த கல்யாணம் செய்திருக்கிறார். அதாவது வேற வழியில்லாமல் திருமணம் செய்திருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி பெயர் ஸ்ருதி, அவர் திமுக மகளிரணியில் இருக்கிறார். மேடையில் நன்றாக பேசத்தெரிந்தவர். சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பேசி இருக்கிறார். என்னுடைய பார்வையில் ஜாய் கிரிசில்டாவை விட ஸ்ருதி அழகானவர். ஸ்ருதி வக்கீலுக்கு படித்தவர். வக்கீலிடம் அவ்வளவு சீக்கிரமா டகால்டி வேலை செய்ய முடியுமா... அதனால் தான் தனக்கு தன்னுடைய கணவருக்கும் விவாகரத்து ஆகவில்லை என ஸ்ருதி சொல்கிறார். ஸ்ருதி வழக்கறிஞர் என்பதால் அவர் இந்த விஷயத்தை சும்மா விட மாட்டார்” என பயில்வான் கூறி இருக்கிறார்.