ஓடிடியில் கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதுப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன 28 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடுவதால், அதனை தியேட்டரில் பார்ப்பவர்களை விட ஓடிடியில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரசிகர்களை கவரும் விதமாக ஓடிடி தளங்களும் வார வாரம் புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை ரிலீஸ் செய்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கடந்த ஜூலை 21-ந் தேதி முதல் ஜூலை 27ந் தேதி வரை நெட்பிளிக்ஸ், அமேசான், சோனி லிவ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்களை பற்றி பார்க்கலாம்.
24
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள்
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் அதர்வா நடித்த டிஎன்ஏ திரைப்படம் 5ம் இடத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 13 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் மாதவன் நடித்த இந்திப் படமான ஆப் ஜெய்சோ கொய் உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்தப் படத்திற்கு 20 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ரோந்த் என்கிற மலையாள திரைப்படம் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 24 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
34
டாப் 2வில் இடம்பிடித்த குபேரா
தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சேகர் கம்முலா இயக்கிய இப்படம் கடந்த மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. ஜூலை 18ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆன குபேரா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 37 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை சர்சமீன் என்கிற இந்திப் படம் பிடித்துள்ளது. பிருத்விராஜ் நடித்துள்ள இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படத்திற்கு 45 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது.
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 வெப் தொடர்கள் பட்டியலில், Mitti - Ek Nayi Pehchaan என்கிற வெப் தொடர் 22 லட்சம் வியூஸ் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் அமேசான் எம்.எக்ஸ்.பிளேயர் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதே ஓடிடியில் வெளியான Gutar Gu என்கிற வெப் தொடரின் மூன்றாவது சீசன் 24 லட்சம் பார்வைகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.
நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் Mandala Murders என்கிற இந்தி வெப் தொடர் 25 லட்சம் பார்வைகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் ஹண்டர் சீசன் 2 வெப் தொடர் பிடித்துள்ளது. அதற்கு 3 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதில் முதலிடத்தை Special OPS வெப் தொடரின் இரண்டாவது சீசன் பிடித்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் தொடர் 1 கோடியே 5 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.