பெண் என்றால் பத்தினியா தான் இருக்கணுமா? 'Bad Girl' பட இயக்குனர் வர்ஷா சர்ச்சை பேச்சு - எகிறும் கண்டனம்!

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யாப் வழங்கும் 'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இந்த டீசர் விழாவில் இயக்குனர் பேசிய தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

கலாச்சார சீரழிவை முன்னிறுத்துவதா?

இதுவரை திரைக்கு வராத கதைகளை இயக்க வேண்டும் என்கிற பெயரில், சில இயக்குனர்கள் கலாச்சார சீரழிவை முன்னிறுத்துவதாக, இந்த டீசரை பார்த்த பின்னர் நெட்டிசன்கள் பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மோகன் ஜி:

அதே போல் பிராமண சமூகத்தை முன்னிறுத்தி ஏன் இந்த படத்தில் நடிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்க வேண்டும் என்கிற குற்ற சாட்டுகளையும் முன் வைத்து வருகிறார்கள். குறிப்பாக நேற்றைய தினம் இது பற்றி இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சமூக வலைத்தளத்தில், "ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது, ஒரு சிலருக்கு  எப்போதும் ஒரு தைரியமான மற்றும் புதுமையான படமாகும். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் & கோ.விடமிருந்து இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும். பிராமண அப்பா அம்மாவை திட்டுவது , ட்ரெண்டி அல்ல.. உங்கள் சொந்த சாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தினரிடம் அதைக் காட்டுங்கள் என காட்டமாக பதிவிட்டிருந்தார்.

குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!


நெட்டிசன்கள் கருத்து:

கிட்ட தட்ட மோகன்ஜி கருத்தை தான், நெட்டிசன்கள் பலர் தங்களின் கருத்தாக முன்னிறுத்தி வருகிறார்கள். அதே போல் சிலர் 'காதலிக்க நேரமில்லை' படத்துடன், இந்த படத்தை ஒப்பிட்டு, மற்றொரு கலாச்சார சீரழிவை முன்னிறுத்தும் திரைப்படம் என கூறி வருகின்றனர். 

பள்ளி மாணவியை தவறாக சித்தரிப்பதா?

பள்ளி படிக்கும் பெண்ணை எப்படி தவறாக சித்தரிக்க முடியும் என்கிற கேள்வியும் தற்போது ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் வர்ஷா பேசியதற்கும், எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

திருமண தேதியை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்கள்!

பெண் என்றால் பத்தினியாக தான் இருக்கணுமா?

பெண் என்றால் பத்தினியாக தான் இருக்கணுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.  பெண் என்றால் பத்தினி தன்மை, தாய்மை, பூப்போல தான் இருக்கணுமா? எதற்கு அவளை ஒரு வட்டத்தில் அடைக்கிறீங்க என வர்ஷா கேள்வி எழுப்பி உள்ளார் . இவரின் பேச்சு, குறிப்பாக தமிழகத்தின் கலாச்சார முறையை சீரழிக்கும் விதத்தில் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. எனவே பலர் தங்களின் கண்டனத்தை எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் பா ரஞ்சித், போன்ற பலர் இந்த படத்தின் டீசருக்கு வாழ்த்து கூறி வரவேற்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அஞ்சலி சிவராமன்:

அஞ்சலி சிவராமன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், கதாநாயகியின் அம்மாவாக சாந்தி பிரியா நடித்துள்ளார். மேலும் சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம் மற்றும் சஷாங்க் பொம்மிரெட்டிபள்ளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

பிக்பாஸ் ஹிந்தியில் கலக்கிய ஸ்ருதிகா வெளியிட்ட திருமண போட்டோஸ்!

விரைவில் ரிலீஸ்

ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி மற்றும் பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, அமித் திரிவேதி மற்றும் ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள  IFFR நிகழ்வில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!