தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு முதல் படத்திலேயே கனமான வேடங்கள் கிடைப்பது அறிதான விஷயம். அப்படி முதல் படத்திலேயே துணிச்சலான வேடத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் திவ்ய பாரதி. பேச்சிலர் படத்தில் சுப்பு என்கிற கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.
பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை திவ்ய பாரதிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள மதில்மேல் காதல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது சேரன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
படங்களில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இயங்கி வரும் திவ்ய பாரதி, அதில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அண்மையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர், அங்கு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அலப்பறை செய்தார்.
இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை திவ்ய பாரதி, அந்த விழாவிற்கு மொத்த ஸ்ட்ரக்சரும் நச்சுனு தெரியும் அளவிற்கு டைட்டான நீல நிற உடை அணிந்து வந்திருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.