விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இல்லத்தரசிகளைக் கடந்து, பல இளைஞர்களையும் விஜய் டிவி சீரியல் சென்றடைந்துள்ளது என கூறலாம். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று, 'பாக்கியலட்சுமி' பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி வரும், ஸ்ரீமோகி என்ற சீரியலின் ரீமேக்காக, தமிழில் இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
காதலி ராதிகா கணவருடனான பிரச்சனை காரணமாக அவரைப் பிரிந்து வாழ்கிறார்... என்பதை கோபி தெரிந்து கொண்டதும், எப்படியும் ராதிகாவை மீண்டும் காதலில் விழுழ்த்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்கிறார். இதற்காக எந்த தியாகங்களையும் செய்யத் துணிகிறார்.
பாக்கியலட்சுமி-யாக நடித்து வரும் சுசித்ராவுக்கு தொடர்ந்து மிகப்பெரிய ஆதரவு சீரியல் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் எழில் - அமிதா இடையே உண்டான காதல் பிரச்சனை தான் மிகவும் விறுவிறுப்பை ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் கருத்து சொல்லும் விதமாக, இயக்குனர் கணவரை இழந்த பெண்களும் காதலிக்கலாம்... திருமணம்... செய்து கொள்ளலாம் என்கிற சமூக அக்கறையோடு எடுத்துள்ளதாக பலர் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.