தொகுப்பாளராக சன் டிவியில் அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த 'வம்சம்', 'வாணி ராணி', 'மரகத வீணை', 'ஆண்டாள் அழகர்' போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
Reshma pasuleti
பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும், சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கும் இவருடைய நடிப்புக்கும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நான் அமெரிக்காவில் இருந்தபோது, திடீரென தன்னுடைய சகோதரி ஒருநாள் போன் செய்து என்னுடைய செக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளதாக தெரிவித்தார். உடனே நான் அப்படி இருக்க வாய்ப்பில்லை என கூறி அந்த வீடியோவை எனக்கு அனுப்புமாறு தெரிவித்தேன். பின்னர், அந்த வீடியோ முழுக்க முழுக்க மாப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது எனக்கு தெரிய வந்தது. மேலும் தன்னுடைய அம்மா தான் இதனை தன்னுடைய சகோதரி இடம் கேட்க சொல்லி கூறியதும் எனக்கு தெரிந்தது.
ஆனால் எந்த ஒரு திரை பின்னணியும் இல்லாத ஒரு எளிய பெண்ணின் வாழ்க்கையில் இது நடந்திருந்தால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, தற்கொலை முடிவை கூட எடுத்து இருக்கலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.