
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இப்படம் அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்ததால் கடந்த வாரம் அதற்கு போட்டியாக தமிழில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் இந்த வாரம் வருகிற ஆகஸ்ட் 22ந் தேதி கூலி படத்தை காலி பண்ண சில படங்கள் தியேட்டரில் களமிறக்கப்பட இருக்கின்றன. அதுமட்டுமின்றி இந்த வாரம் ஓடிடியிலும் ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆகஸ்ட் 22ந் தேதி தமிழில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதில் ஒன்று இந்திரா. இப்படத்தில் வஸந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ள இப்படத்தை சபரீஸ் நந்தா இயக்கி உள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் இசையமைத்து உள்ளார்.
அதேபோல் ஆகஸ்ட் 22ந் தேதி ரிலீஸ் ஆகும் மற்றொரு படம் சொட்ட சொட்ட நனையுது. இப்படத்தை நவீன் எஸ் ஃபரீத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நிஷாந்த் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் வர்ஷினி வெங்கட், ஷாலினி ஆகியோர் ஹீரோயினாக நடித்துள்ளனர்.
ஃபால் ஃபார் மீ (ஆகஸ்ட் 21) : லில்லி தனது தங்கையின் வருங்காலக் கணவர் மீது சந்தேகப்படுகிறார். அப்போது அவரது வாழ்க்கையில் ஒரு புதிய நபர் வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. ஸ்வென்ஜா ஜங், தியோ ட்ரெப்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தில் அதிகப்படியான காதல் காட்சிகள் இருப்பதால், தனியாகப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
வெல்கம் டு சடன் டெத் (ஆகஸ்ட் 21) : மைக்கேல் ஜெய் வொயிட் நடிக்கும் அதிரடிப் படம் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகிறது.
அபான்டண்ட் மேன் (ஆகஸ்ட் 22) : தனது அண்ணன் செய்த தவறுக்காக சிறைக்குச் சென்ற ஒருவரின் கதை.
மாரீசன் (ஆகஸ்ட் 22) : வடிவேலு, பகத் பாசில் நடித்த நகைச்சுவை கலந்த திரில்லர் படம்.
ஹாஸ்டேஜ் (ஆகஸ்ட் 21) : பிரிட்டன் பிரதமரின் கணவர் கடத்தப்படுகிறார், பிரான்ஸ் அதிபருக்கு மிரட்டல் வருகிறது. இதனால் இருவரும் என்ன மாதிரியான சூழலைச் சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கதை.
அமர் பாஸ் (ஆகஸ்ட் 22) : ராக்கி குல்சார், சிபோ பிரசாத் முகர்ஜி நடித்த குடும்பப் படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஓடிடியில் வெளியாகிறது.
ஷோத் (ஆகஸ்ட் 22) : காணாமல் போன மனைவியைத் தேடும் கணவரின் கதை.
தலைவன் தலைவி (ஆகஸ்ட் 22) - கணவன் - மனைவிக்கு இடையேயான காதலையும், மோதலையும் அழகாகவும் யதார்த்தமாகவும் சொன்ன படம் தான் இது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார்.
மிஷன் இம்பாசிபிள் The Final Reckoning - இப்படம் தற்போது காசு கட்டி பார்க்கும் படி ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
F1The Movie - ஆகஸ்ட் 22-ந் தேதி முதல் இப்படத்தை காசு கட்டி பார்க்க முடியும்.
இத்தி சி குஷி (ஆகஸ்ட் 18) : சும்புல் தௌகீர், வருண் படலா, ராஜத் வர்மா நடிக்கும் தொடர் இது.
ஈனி மீனி (ஆகஸ்ட் 22) : ஒரு இளம்பெண்ணின் முந்தைய வாழ்க்கை, ஓட்டுநர், அவரது முன்னாள் காதலன் ஆகியோருக்கு இடையேயான கதை.
பீஸ்மேக்கர் சீசன் 2 (ஆகஸ்ட் 22) : இந்தத் தொடர் ஆகஸ்ட் 22 அன்று வெளியாகிறது.