2025ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Published : Aug 18, 2025, 10:46 AM IST

2025-ம் ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் அதிக வசூல் அள்ளி பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 இடம்பிடித்த படங்கள் என்னென்ன என்பதை இந்த லிஸ்ட்டில் பார்க்கலாம்.

PREV
14
2025 Top 10 Highest Collected Movies in Tamil

2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பல்வேறு ஆச்சர்யங்களும், ஏமாற்றங்களும் நிறைந்த ஒரு ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு எந்த படங்களெல்லாம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டதோ அவையெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி இருக்கின்றன. அதே நேரத்தில் மதகஜராஜா, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் எல்லாம் எதிர்பாராமல் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவை காப்பாற்றி இருக்கின்றன. ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரம் வரை, தமிழ் சினிமாவில் எந்தெந்த படங்கள் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளி இருக்கின்றன என்பதையும் அதன் டாப் 10 பட்டியலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
டாப் 10 படங்கள்

அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்களின் பட்டியலில் 10வது இடத்தில் சியான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் உள்ளது. அருண்குமார் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.64 கோடி வசூலித்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக 9-வது இடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி உள்ளது. ஜூலை மாதம் திரைக்கு வந்த இப்படம் ரூ.84 கோடி வசூலித்திருக்கிறது. இதையடுத்து இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட் படமான டூரிஸ்ட் ஃபேமிலி இந்த பட்டியலில் 8-ம் இடத்தை பிடித்திருக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.87 கோடி வசூலித்துள்ளது.

34
பெரிய பட்ஜெட் படங்கள்

இந்த பட்டியலில் 7வது இடத்தை ரெட்ரோ திரைப்படம் தட்டி தூக்கி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.97 கோடி வசூலித்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி அட்டர் பிளாப் ஆன தக் லைஃப் திரைப்படம் உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தும் இப்படம் எடுபடவில்லை. இப்படம் மொத்தமாகவே ரூ.97.25 கோடி வசூலித்து 6ம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை தனுஷின் குபேரா படம் பிடித்துள்ளது. இப்படம் உலகளவில் 135.75 கோடி வசூலித்திருந்தது.

44
முதலிடத்தை தட்டிதூக்கிய கூலி

அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்திருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படம் ரூ.135.89 கோடி வசூலித்தது. இதற்கு அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 151 கோடியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.246 கோடி வசூலித்திருந்தது. இதில் லேட்டாக எண்ட்ரி கொடுத்தாலும் லேட்டஸ்டாக இணைந்திருக்கும் படம் கூலி. ரஜினிகாந்த் நடித்த இப்படம் நான்கு நாட்களிலேயே கிட்டத்தட்ட 400 கோடி வசூல் அள்ளி முதலிடத்தில் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories